உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்குவரத்து தொழிற்சங்க வேலை நிறுத்த வாயிற்கூட்டம்

போக்குவரத்து தொழிற்சங்க வேலை நிறுத்த வாயிற்கூட்டம்

கடலுார் : கடலுார் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அண்ணா தொழிற்சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம், பாரதிய தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த விளக்க வாயிற் கூட்டம் நடந்தது.கடலுார் அரசு போக்குவரத்து கழக அலுவலகம் எதிரில் நடந்த கூட்டத்திற்கு, தொழிற்சங்க நிர்வாகிகள் கனகசபை, ராஜேந்திரன், இளம்பரிதி முன்னிலை வகித்தனர். அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு துணை செயலாளர் அன்பு, த.மா.க., தொழிற்சங்கம் பொதுச்செயலாளர் மூர்த்தி, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினர்.இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை பேசி முடிக்காமல் இழுத்தப்படிதை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக கோஷங்கள் எழுப்பினர்.கூட்டத்தில், நிர்வாகிகள் ஜான்பீட்டர், தண்டபாணி, சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மண்டல தலைவர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி