| ADDED : ஜன 09, 2024 06:56 AM
கடலுார் : போராட்டத்தில் ஈடுப்படும் போக்குவரத்து தொழிலாளர்கள் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுவதும், ஆளும் கட்சி தொ.மு.ச., தொழிற்சங்கம் பஸ்கள் இயக்க விடுப்பிப்பில் உள்ள தொழிலாளர்களை பணிக்கு அழைப்பதுமாக இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக தொழிலளர்கள் ஓய்வூதியர் அகவிலைப்படி உயர்வு, நான்கு மாத நிலுவைத் தொகை வழங்கல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு., உள்ளிட்ட 26 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்தது.போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்கும்படி தொழிற்சங்க நிர்வாகிகள், பஸ் நிலையம், கடை வீதிகளில் பொதுமக்களை சந்தித்து நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். அதேவேளையில் ஆளும் கட்சி தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (தொ.மு.ச) நிர்வாகிகள், மாவட்டத்தில் உள்ள அனைத்து பனிமனைகளுக்கு சென்று சங்க உறுப்பினர்கள் பட்டியல், விடுப்பில் உள்ள தொழிலாளர்கள் பட்டியலை எடுத்து ஆளும் கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்த அனைவரும் உடன் பணிக்கு திரும்ப அதிகாரிகள் துணையுடன் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் கடலுார் மாவட்ட போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களின் போராட்டத்தால் அரசு பஸ்கள் இயங்குமா, இயங்காத என பொதுமக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.