உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கொடுக்கூர் பள்ளியில் மரம் நடும் விழா

 கொடுக்கூர் பள்ளியில் மரம் நடும் விழா

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கொடுக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். துவக்கக் கல்வி அலுவலர் ஞானவள்ளி தலைமை தாங்கினார். ஆசிரியர் வரதராஜன் வரவேற்றார். கருணையின் கரங்கள் நிர்வாக அறங்காவலர் கரோலின் முன்னிலை வகித்தார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு பரிசு வழங்கி, மரக்கன்றுகள் நட்டார். விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள், பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், மாணவர்களுக்கு மதிய விருந்து வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியை மலர்விழி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ