உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் விற்ற இருவர் கைது

மதுபாட்டில் விற்ற இருவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் எருமனுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அதேகிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் மனைவி ராணி, 38, கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து ராணியை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 5 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.அதேபோல், கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா தலைமையிலான போலீசார் ஓட்டிமேடி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற அதேபகுதியைச் சேர்ந்த சக்ரவர்த்தி மகன் முனுசாமியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை