உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பஸ் கண்டக்டருக்கு கொலை மிரட்டல்: இருவர் கைது

அரசு பஸ் கண்டக்டருக்கு கொலை மிரட்டல்: இருவர் கைது

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் அரசு பஸ் கண்டக்டரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர். அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கீழ செங்கல்பட்டை சேர்ந்த மாரிமுத்து மகன் அசோக் ராஜ், 39; இவர் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக தற்காலிக கண்டக்டர். நேற்று முன்தினம் இரவு காட்டுமன்னார்கோயிலில் இருந்து ஜெயங்கொண்டதிற்கு சென்ற அரசு பஸ்ஸில் அசோக்ராஜ் கண்டக்டராக பணியில் இருந்தார். பஸ்சில் பயணித்த கண்டமங்கலம் குமிலன் காட்டு தெருவை சேர்ந்த மதியழகன் மகன் குஜிலி என்கிற இளவேந்தன், 25; காத்தாயி அம்மன் கோயில் தெரு கண்ணன் மகன் மணிகண்டன், 22; இருவரும் பஸ் படியில் நின்று பயணம் செய்தனர். இதனை கண்டக்டர் அசோக் ராஜ் கண்டித்ததால், இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இளவேந்தன், மணிகண்டன் கண்டக்டர் அசோக் ராஜை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். கண்டக்டர் அசோக்ராஜ் பஸ்சை காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி, தகராறு செய்து மிரட்டல் விடுத்த இருவரையும் போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தார். போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை