உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல் விருதையில் இருவர் கைது

ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல் விருதையில் இருவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.விருத்தாசலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், எஸ்.பி., தனிப்படை போலீ சார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அதில், விருத்தாசலம் கடைவீதி பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் பங்காராம், 33, பவாராம், 43, ஆகியோரது குடோன்களில் 37 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட பான் மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும்.இது தொடர்பாக, விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், ரவிக்குமார் ஆகியோர் வழக்குப் பதிந்து, பங்கா ராம், பவாராம் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ