உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் திருட்டு

 வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் திருட்டு

ராமநத்தம்: வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் செயின் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநத்தம் அடுத்த மா.புடையூரைச் சேர்ந்தவர் சக்திவேல், 50; இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு கதவின் பூட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் அருகிலுள்ள உறவினர் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் சிலர், அவரது வீட்டு கதவின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த, 2 சவரன் செயின் மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடி சென்றனர். நேற்று காலை அவர் வீட்டிற்கு வந்த போது, கதவின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை