உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அப்பர் சதய உற்சவம் நாளை துவக்கம்

அப்பர் சதய உற்சவம் நாளை துவக்கம்

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் அப்பர் சுவாமி சதய உற்சவம் நாளை துவங்குகிறது. நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் அப்பர் சுவாமி சதய உற்சவம் நாளை 14ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதனை முன்னிட்டு தினமும் விநாயகருக்கும், அப்பர் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. வரும் 22ம் தேதி கட்டமுது உற்சவம், 23ம் தேதி அப்பர் சுவாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சுந்தரமூர்த்தி செய்து வருகிறார். தினமும் மாலை ஆன்மிக சொற்பொழிவு நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை