உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வள்ளி விலாஸ் ஆலயா பள்ளி ஆண்டு விழா 

வள்ளி விலாஸ் ஆலயா பள்ளி ஆண்டு விழா 

கடலுார், : நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீ வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளி 7வது ஆண்டு விழா நடந்தது.பள்ளி முதல்வர் சீனுவாசன் தலைமை தாங்கினார். தாளாளர் இந்துமதி சீனுவாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் செல்வேந்திரன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். பின், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கினார்.கவுரவ விருந்தினர்களாக குழந்தை நல மருத்துவர் இளந்திரையன், சவுத் இந்தியன் வங்கி மேலாளர் குலசேகரன், கலை ஆசிரியர் ராஜசேகர், பேராசிரியர் செந்தில், ஆக்ஸ்போர்டு அகாடமி இயக்குனர் டேவிட் ராஜ், அக் ஷய் பங்கேற்றனர்.விழாவில், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு, உதவி தலைமை ஆசிரியை மீனா ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. யோகா, கராத்தே, சிலம்பம், கீ போர்டு, டிரம்ஸ் உள்ளிட்ட பயிற்சி பெறும் மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை