உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் துணை ஜனாதிபதி வழிபாடு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் துணை ஜனாதிபதி வழிபாடு

சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் மற்றும் பரங்கிப்பேட்டை பாபாஜி கோவில்களில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், குடும்பத்துடன், சுவாமி தரிசனம் செய்தார்.துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி வந்தார். புதுச்சேரி பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், நேற்று முன் தினம் காலை, ஹெலிகாப்டரில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை வளாகத்தில் உள்ள ஹெலிபேடில் வந்திறங்கினார். தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், கலெக்டர் அருண் தம்புராஜ், எஸ்.பி.,ராஜாராம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.அங்கிருந்த காரில், 9:30 மணிக்கு நடராஜர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றார். பொது தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். சித் சபையில் ஏறி சுவாமி தரிசனம் செய்தார். தீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை செய்து துணை ஜனாதிபதிக்கு பிரசாதம் வழங்கினர்.பரங்கிப்பேட்டை பாபாஜி கோவிலுக்கு காலை 10:55 மணிக்கு சென்றார். கிரியா பாபாஜி யோகா சங்கத் தலைவர் வெங்கட் சுப்ரமணியன் வரவேற்றார். குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த துணை ஜனாதிபதி, கோவில் சிறப்பம்சங்களை கேட்டறிந்தார்.கோவில் நிர்வாகம் சார்பில், துணை ஜனாதிபதிக்கு சித்தர் பாடல் புத்தகம், பாபாஜி படம், பாபாஜியின் நேரடி சீடர் யோகி ராமையா வழங்கினார்.துணை ஜனாதிபதி, புவனகிரியில் பங்கேற்க இருந்த தனியார் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால், பரங்கிப்பேட்டையில் இருந்து சிதம்பரம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னைக்கு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி