உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை வசதி கேட்டு கிராம மக்கள் மறியல்

சாலை வசதி கேட்டு கிராம மக்கள் மறியல்

ஸ்ரீமுஷ்ணம்: சாலை வசதி கேட்டு கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கள்ளிப்பாடி காலனியில் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதிக்கு சாலையை புதுப்பிக்க நேற்று அளவீடு செய்யப்பட்டது. அப்போது, சாலையை ஒட்டியுள்ள நிலத்தின் உரிமையாளர் தனது நிலம் சாலையில் நடுபகுதிவரை உள்ளதாக கூறி சாலை ஓரத்தில் இருந்த மண்ணை வெட்டி அகற்றினார். இதனால், சாலை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், சாலையை மறு அளவீடு செய்து, சாலை அமைக்க வலியுறுத்தி, கள்ளிப்பாடி- குணமங்கலம் சாலையில் வந்த அரசு பஸ்சை சிறைப் பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் சேகர், சப் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை