உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கீரப்பாளையம் அரசு பள்ளியில்பார்த்தீனியம் செடி அழிப்பு முகாம்

கீரப்பாளையம் அரசு பள்ளியில்பார்த்தீனியம் செடி அழிப்பு முகாம்

புவனகிரி:மாவட்ட கல்வித்துறை சார்பில் கீரப்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளி அருகில் பார்த்தீனியம் செடி அழிப்பு முகாம் நடந்தது.மாவட்ட கல்வி அலுவலர் பாரதமணி தலைமை தாங்கினார். புவனகிரி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நெடுமாறன் வரவேற்றார். மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் தேவநாதன், தேசிய பசுமைப்படை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் இளங்கோவன், தனசேகரன், மாவட்ட சாரண, சாரணிய அமைப்பு செயலர் இளையகுமார் முன்னிலை வகித்தார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி முகாமை துவக்கி வைத்தார். புவனகிரி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் சிதம்பரம் - கீரப்பாளையம் சாலை பள்ளி வளாகம் உள்ளிட்ட பகுதியில் படர்ந்திருந்த பார்த்தீனியம் செடிகளை அழித்தனர்.பின்னர் இச்செடிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அப்பகுதியில் சென்றவர்களிடம் விளக்கிக் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை