உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வாக்களர் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம் : கலெக்டர் ஆய்வு

 வாக்களர் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம் : கலெக்டர் ஆய்வு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். கடலுார் மாவட்டம், சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி மற்றும் கடலுார் ஆகிய வட்டங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறுகையில்; கடலுார் மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மற்றும் புகைப்படம் மாற்றம் ஆகியவற்றிற்கான முகாம்கள் இன்று 28 ம் தேதியும், வரும் ஜன. 3 மற்றும் 4ம் தேதிகளில் 9 சட்டசபை தொகுதிகளில், 2590 வாக்குச்சாவடி மையங்களிலும் நடக்கிறது. பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட விண்ணப்பங்களை https://www.eci.gov.in/electors, https://voters.eci.gov.in/ ஆகிய இணையதளங்களில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மீது விசாரணை மேற்கொண்டு, வரும் பிப். 17 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை