மேலும் செய்திகள்
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
03-Nov-2025
நெய்வேலி: நெய்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட நெய்வேலி நகர பகுதி சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி தொடர்பான பயிற்சி வகுப்பு, நெய்வேலி டவுன்ஷிப் தேர்தல் அலுவலகத்தில் நடந்தது. நெய்வேலி நகர தேர்தல் பொறுப்பாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். நெய்வேலி நில எடுப்பு துறை துணை கலெக்டர் வில்சன், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி தணபதி, துணை தாசில்தார் மோகன் மற்றும் முதன்மை மேலாளர் அருள் முன்னிலை வகித்தனர். பயிற்சி முகாமில், சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் குறித்தும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பணி குறித்து விளக்கப்பட்டது. மேற்பார்வையாளர் மணிமாறன் நன்றி கூறினார்.
03-Nov-2025