உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கோபுரம் அமைப்பு

குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கோபுரம் அமைப்பு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில், குற்றசம்பவங்களை தடுக்கும் வகையில் , சி.சி.டி.வி., கேமராவுடன் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டியை வரும் 20ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் அருகில் உள்ள முக்கிய நகரங்களில் புத்தாடை, இனிப்பு, பாட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்க குவிந்து வருகின்றனர். அதேபோல், விருத்தாசலம் நகரத்திற்கு, சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் புத்தாடை, இனிப்பு, பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்க குவிந்து வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் சிலர், பொதுமக்களிடம் கைவரிசை காட்டும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சார்பில், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான, பஸ் ஸ்டாண்ட், பாலக்கரை, கடைவீதி ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கண்காணிப்பு கோபுரங்களில், சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்தி, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை