பெலாந்துறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பெண்ணாடம்: தொடர் கனமழை காரணமாக பெலாந்துறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து பாசன ஏரிகளுக்கு 50 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கடலுார், அரியலுார் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மாலை, இரவு நேரங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அரியலுார் மாவட்டம், ஆணைவாரி மற்றும் உப்பு ஓடைகளில் இருந்து பாய்ந்த மழைநீரால் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று காலை 7:00 மணி நிலவரப்படி பெண்ணாடம் அடுத்த பெலாந்துறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் 5 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. 6 ஷட்டர்கள் மூலம் 673 கன அடி உபரிநீர் வெள்ளாற்றிலும், 50 கன அடி நீர் பாசன வாய்க்கால் மூலம் ஏரிகளுக்கும் திறந்து விடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் வெள்ளாற்றங்கரையோரம் நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். வாகன ஓட்டிகள் அவதி விருத்தாசலம் பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால், கடுமையாக போக்குவரத்து பாதிக்கிறது. சுந்தரபாண்டியன், விருத்தாசலம். போக்குவரத்துக்கு இடையூறு விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்யாணமுருகன், விருத்தாசலம்.