உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சாலையில் விழுந்த மின் கம்பம் சீரமைக்கப்படுவது எப்போது?

 சாலையில் விழுந்த மின் கம்பம் சீரமைக்கப்படுவது எப்போது?

புவனகிரி: புவனகிரி அருகே, சாலையில் விழுந்து கிடக்கும் மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. புவனகிரி ஒன்றியம், மருதுார் பகுதியில், மின்கம்பம் சாய்ந்து, மின் ஒயரும் அறுந்து விழுந்தது. அந்த நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்ததால் எந்த பாதிப்பும் இல்லை. இந்நிலையில் அந்த மின்கம்பம் சரி செய்யப்படாமல் கிடப்பில் போடப் பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மின்தடை நீடித்து வருகிறது. அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி