உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க., சறுக்கியது ஏன்?

சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க., சறுக்கியது ஏன்?

சிதம்பரம் : சிதம்பரம் லோக்சபா தொகுதியில், கடலுார் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி சட்டசபை தொகுதிகள்தான் வி.சி., வேட்பாளரின் வெற்றியை தீர்மானித்துள்ளது.சிதம்பரம் லோக்சபா தொகுதி, கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் மற்றும் அரியலுார் மாவட்டத்தில் அரியலுார், ஜெயங்கொண்டம், பெரம்பலுார் மாவட்டத்திற்குட்பட்ட குன்னம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது.நடந்து முடிந்த தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட வி.சி., கட்சி வேட்பாளர் திருமாவளவன் 5 லட்சத்து 5 ஆயிரத்து 84 ஓட்டுகளும், அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் 4 லட்சத்து ஆயிரத்து 530 ஓட்டுகளும் பெற்றனர். இதில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 554 ஓட்டுகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார்.திருமாவளவனின் வெற்றியை கூட்டணி பலம்தான் தீர்மானித்தது என கூறப்பட்டாலும், அவரது சொந்த ஊரான அங்கனுார், அரியலுார் மாவட்டத்தில் உள்ளது. ஆனாலும், அரியலுார் தொகுதி மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் தொகுதியில் அவருக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைக்கவில்லை. திருமாவளவனை விட அ.தி.மு.க.,வேப்பாளர் சந்திரகாசன் இரு தொகுதிகளிலும் கூடுதல் ஓட்டுகளை பெற்றுள்ளார். பெரம்பலுார் மாவட்டதிற்குட்பட்ட குன்னம் தொகுதியில் கூட திருமாவளனுக்கு, 8 ஆயிரத்து 885 ஒட்டுகள் தான் அ.தி.மு.க, வேட்பாளரை விட கூடுதலா கிடைத்தது.அதே சமயத்தில், கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட காட்டுமன்னார்கோவிலில் 49 ஆயிரத்து 436, சிதம்பரத்தில் 32 ஆயிரத்து 481, புவனகிரியில் 22 ஆயிரத்து 765 ஓட்டுகள் என, மொத்தம் 1 லட்சத்து 4 ஆயிரத்து682 ஓட்டுகள் அ.தி.மு.க., வேட்பாளரை விட கூடுதலாக கிடைத்து, வி.சி., வேட்பாளரின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.இதில் சிதம்பரத்தில் பாண்டியன், புவனகிரியில் அருண்மொழித்தேவன் என, இரு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் கோட்டை விட்டுட்டாங்க. இரு தொகுதிகளில் 50 ஆயிரத்து 246 ஓட்டுகள் கூடுதலாக வி.சி., வேட்பாளருக்கு கிடைத்தது எப்படி என, அ.தி.மு.க., வினரே புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை