உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் தி.மு.க., மீண்டும் களமிறங்குமா

கடலுாரில் தி.மு.க., மீண்டும் களமிறங்குமா

கடலுார் லோக்சபா தொகுதியில், கடந்த தேர்தலில், மூத்த அமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனையின்படி, பண்ருட்டி முந்திரி தொழிலதிபர் ரமேஷ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின், தொகுதி பக்கம் வராதது, கொலை வழக்கில் சிக்கியது என வாக்காளர்கள், தி.மு.க.,வினரிடம் அதிருப்தி நிலவுகிறது.இந்நிலையில், வரும் தேர்தலில் ஒட்டுமொத்த தொகுதிகளையும் தி.மு.க., கைப்பற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் சம்மந்தப்பட்ட தொகுதியில் கட்சி நிர்வாகிகள் பதவிகள் பறிக்கப்படும் என முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.இதனால், கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் உள்ளூர் அமைச்சர்களுக்கு நற்பெயரை பெற்றுத் தர வேண்டி, தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, கடலுார் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் தமிழ்நாடு காங்., தலைவர் அழகிரி, எப்படியாவது தொகுதியை வசமாக்கும் வகையில் டில்லியில் முகாமிட்டுள்ளார்.அதுபோல், தி.மு.க., களமிறங்கி வெற்றி பெற்ற தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு விட்டுத்தராது எனவும், தங்களது சொந்த கட்சி வேட்பாளர்களே களத்தில் இறங்குவர் என தி.மு.க., நிர்வாகிகளும் உற்சாகமாக உள்ளனர். இதனால், கடலுார் லோக்சபா வேட்பாளர் யார் என தி.மு.க., அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இது குறித்து தி.மு.க.,வினர் கூறுகையில், 'முன்னாள் காங்., தலைவர் என்பதால், தி.மு.க., தலைமையிடம் அழகிரிக்கு நெருக்கம் அதிகம். அவரது சொந்த தொகுதி என்பதால், கடலுாரை கேட்டு பெறலாம். அதுபோல முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆதரவாளராக இருந்த அழகிரி, மாநில தலைவரானதும் தனி ரூட் எடுத்து செயல்பட்டார். இதனால், அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட சிதம்பரம் தரப்பு விரும்பாது. தி.மு.க., எம்.பி., மீது அதிருப்தி இருப்பதால், காங்.,க்கு ஒதுக்கி, வேடிக்கை பார்க்கவும் வாய்ப்புள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை