உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரம்

விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி ஆக., 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்கள் பல அடி உயரமுள்ள விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து பூஜைகள் நடத்தி கடலில் கரைப்பது வழக்கம். தண்ணீரில் கரையும் பொருட்களை கொண்டு சிலைகளை செய்ய வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்த ஆனந்த், பல அடி உயரங்களில் பல விதமானவிநாயகர் சிலைகளை தயார் செய்து வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'தண்ணீரில் கரையும் தன்மையுள்ள மரவள்ளி கிழங்கு மாவில் இருந்து 4 அடி முதல் 10 அடி உயரம் வரை பல விதமான விநாயகர் சிலைகள் தயாரித்துள்ளோம். விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி