உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை விபத்து தொழிலாளி பலி

சாலை விபத்து தொழிலாளி பலி

திட்டக்குடி: திட்டக்குடி சாலை விபத்தில் படுகாயமடைந்த கூலித்தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். திட்டக்குடி அடுத்த பட்டூரைச் சேர்ந்தவர் முருகேசன், 43; கூலித் தொழிலாளி. கடந்த மாதம் 28ம்தேதி மாலை 3:00 மணியளவில் தனது மனைவி பிரியாவுடன் பைக்கில் திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் சென்றார். கூடலுார் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, சாலை யின் குறுக்கே வந்த மாடு மீது பைக் மோதியதில் முருகேசன் படுகாயமடைந்தார். இவரது மனைவி பிரியாற்கு லேசான காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த முருகேசனை மீட்டு, திருச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ