உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் தொகுதியை ஒதுக்க இளைஞர் காங்., வலியுறுத்தல்

கடலுார் தொகுதியை ஒதுக்க இளைஞர் காங்., வலியுறுத்தல்

கடலுார் : லோக்சபா தேர்தலில், கடலுார் தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என, இளைஞர் காங்., வலியுறுத்தியுள்ளது.கடலூர் மத்திய மாவட்ட இளைஞர் காங்., செயற்குழு கூட்டம், கடலூர் டவுன் ஹாலில் நடந்தது. இளைஞர் காங்., மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கலையரசன் தலைமை தாங்கினார். காங்., மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.நிர்வாகிகள் கலைச்செல்வன், வேலு, விக்னேஷ், வெங்கடேசன், மீனவர் அணி கார்த்திகேயன், ஓ.பி.சி., அணி ராமராஜ், பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், கடலுார் லோக்சபா தொகுதியை, கூட்டணியில் காங்., கட்சிக்கு ஒதுக்க வேண்டும், தொகுதியில் போட்டியிட மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்,மத்திய வேளாண் பல்கலைக் கழகம், அரசு சட்டக் கல்லூரி கடலூர் மாவட்டத்தில் ஏற்படுத்த வேண்டும்,மாவட்டத்தில் மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ