உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அவதுாறு செய்தி பரப்பிய யூடியூபர் கைது

அவதுாறு செய்தி பரப்பிய யூடியூபர் கைது

கடலுார்: அவதுாறு செய்தி பரப்புவதாக, தி.மு.க., நகர செயலாளர் கொடுத்த புகாரில், யூடியூபர் கைது செய்யப்பட்டார்.கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த அம்புஜவல்லிபேட்டையை சேர்ந்தவர் சண்முகம், 48; வெப் சேனலில் யூடியூபரான இவர், மணல் குவாரி முறைகேடுகளில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க.,வினர் சம்மந்தப்படுத்தி அவரது வாட்ஸ் ஆப் குழு மற்றும் சில வெப் சேனல்களில் செய்தி வெளியிட்டு, அவதுாறு பரப்புவதாக ஸ்ரீமுஷ்ணம் தி.மு.க., நகர செயலாளர் செல்வக்குமார் போலீசில் புகார் அளித்தார்.இதுகுறித்து, ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிந்து, சண்முகத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை