| ADDED : ஜூலை 11, 2011 11:56 PM
தர்மபுரி: தர்மபுரி அடுத்த மாரவாடியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு முகாமில், பட்டு தொழிலில் ஈடுபடும் மகளிருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறை குறித்து விளக்கப்பட்டது. பட்டு வளர்ச்சி துறை மண்டல இணை இயக்குனர் வேணுகோபால் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் ஜெயவேல் வரவேற்றார். பட்டு வாரிய விஞ்ஞானி ரவிக்குமார், வெண் பட்டு வளர்ப்பின் அவசியம் தொழில் நுட்பங்களை குறித்து பேசினார். ஐ.சி.ஐ.சி.ஐ., (லம்பார்டு) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார் பேசுகையில், ''பட்டு வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் மகளிர் குடும்பத்துக்கு ஆண்டுக்கு 20,000 ரூபாய் வரையான இலவச மருத்துவக்காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது,'' என தெரிவித்தார். விவசாயிகளின் கேள்விக்கு, பட்டு வளர்ச்சிதுறை ஆய்வாளர் ராகவேந்திர குரு, தொழில் நுட்ப உதவியாளர் மணிவண்ணன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். மருத்துவ காப்பீடு பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை மண்டல இணை இயக்குனர் வேணுகோபால் வழங்கினார். விவசாயி கள் நீலாபுரம் பூதாள், காமராஜ் நகர் வேடி, குப்பூர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.