மேலும் செய்திகள்
பக்தர்கள் பால்குட ஊர்வலம்
1 hour(s) ago
நாகாவதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
1 hour(s) ago
வெவ்வேறு விபத்துக்கள்: 3 பேர் உயிரிழப்பு
1 hour(s) ago
தர்மபுரியில் பைக்குகள் திருட்டு
16-Feb-2026
தர்மபுரி: 'தர்மபுரி மாவட்ட தியாகிகளின் கோரிக்கை நிறைவேற்ற கோரி டில்லி பார்லிமென்ட் காந்தி சிலை முன் உண்ணாவிரத போராட்டத்தில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி ஈடுபடப்போவதாக' தமிழ்நாடு சுதந்திர போராட்ட தியாகிகள் சங்கம் சார்பில் முடிவு செய்துள்ளனர்.இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கடந்த 1981ம் ஆண்டு முதல் மத்ய அரசு சுதந்திர சைனிங் சம்மன் பென்ஷன் கோரிய மனுக்கள் நீண்ட நாள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும் மாவட்ட சீர் ஆய்வுக்குழுவில் பரிந்துரை செய்து, கலெக்டர் பரிந்துரை செய்தும் கடந்த 2008ம் ஆண்டு முதல் மத்திய அரசு எந்த பதிலும் தெரிவிக்காமல் உள்ளது. இது குறித்து பல நினைவு கடிதங்கள் அனுப்பியும் பலன் இல்லை. தியாகிகள் குடும்பத்தை தேசிய முதியோர் குடும்பமாக அறிவித்து அரசு ஆதரவு செய்ய வேண்டும். மாநில பென்ஷன் பெரும் தியாகிகளுக்கு மத்திய அரசு பென்ஷன் கொடுக்க ஆவண செய்ய வேண்டும். விலை உயர்வு அகவிலை உயர்வுகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஓய்வூதியத்தை 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும். இக்கோரிக்கை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 13ம் தேதி டில்லி பார்லிமென்ட் காந்தி சிலை முன் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தியாகிகள் குருபரஅள்ளியை சேர்ந்த சிவப்பிரகாசம், பென்னாகரம் முல்வாடி வடிவேல், தேன்கனிக்கோட்டை ஜெயபுரம் மரிசாமி கவுடா, பாப்பாரப்பட்டி ராஜேந்திரன், லளிகம் பெருமாள், ஈசல்பட்டி வரதன், பாளையம்புதூர் பரமசிவம் ஆகியோர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
16-Feb-2026