உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குப்பைகளை அகற்ற நகராட்சிக்கு கோர்ட்டு கெடு

குப்பைகளை அகற்ற நகராட்சிக்கு கோர்ட்டு கெடு

தர்மபுரி: தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட பென்னாகரம் ரோட்டில் குப்பைகளை அகற்ற உயர்நீதிமன்றம் நகராட்சிக்கு கெடு விதித்துள்ளது.தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட பென்னாகரம் ரோட்டில் பொதுமக்கள் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளது. இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசிக்கின்றனர். பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நகராட்சி குப்பை கொட்டும் இடம் அமைந்துள்ளது. தர்மபுரி நகரில் உள்ள வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அப்பகுதியில் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகிறது.இதனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாவதுடன் குடிநீர், விவசாய கிணறு போன்றவை பாதிக்கப்பட்டு வருவதாக புகார் இருந்ததுடன் இது சம்பந்தமான மனுக்கள் கலெக்டர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்பட்டது.குப்பைகளை கொட்ட பெரிய தடங்கம் என்ற கிராமத்தில் 11 ஏக்கர் ஒதுக்கப்பட்டும் குப்பைகள் கொட்ட படவில்லை. பென்னாகரம் ரோட்டில் தொடர்ந்து குப்பைகள் கொட்டுவதால் பொதுமக்கள் பாதிப்பு அடைவதாக பென்னாகரம் ரோட்டை சேர்ந்த சங்கர் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.இதுசம்பந்தமான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் நீதிபதி சிவஞானம் ஆகியோர் பொதுமக்களை கஷ்டபடுத்தி வரும் குப்பை கொட்டும் இடத்தை அரசு ஒதுக்கீடு செய்துள்ள பெரிய தடங்கம் கிராமத்துக்கு மூன்று மாதத்தில் மாற்ற உத்தரவிட்டனர். மேலும் இதுசம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் ஆறு மாதம் அவகாசம் கேட்ட நிலையில் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் மூன்று மாதத்துக்குள் மாற்ற நகராட்சி நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் தரப்பில் உயர்நீதிமன்ற வக்கீல் பிரகாசம் ஆஜரானார்.பல ஆண்டுகளாக பொதுமக்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கி வந்த குப்பை கொட்டும் இடம் சம்பந்தப்பட்ட பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்த உயர்நீதிமன்ற தீர்ப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி