உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாலக்கோட்டில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

பாலக்கோட்டில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

பாலக்கோட்டில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்பாலக்கோடு:பாலக்கோடு, திம்மம்பட்டியில் உள்ள சீர்வி சமாஜ் ஆலயத்தில், வட மாநிலத்தவர் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.வண்ண வண்ண பொடிகளை துாவி, விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். ஹோலி பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து, வாழ்த்துக்களை தெரிவித்து நெற்றியில் திலகமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பனி காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள் ஒன்று கூடி, வண்ணங்கள் நிறைந்த தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் ஊற்றி விளையாடினர். பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என அனைவரும் உற்சாகமாக நடனம் ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை