கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டட மேஸ்திரி கொலை
பாப்பாரப்பட்டி, பாப்பாரப்பட்டி அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டட மேஸ்திரியை வெட்டிக்கொன்ற -டிரைவர் போலீசில் சரணடைந்தார்.தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள கவுரிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் நஞ்சப்பன், 40. கட்டட மேஸ்திரி. இவர் மனைவி மஞ்சு. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில், பிக்கம்பட்டி அடுத்த ஓனாம்பள்ளத்தை சேர்ந்த டிரைவர் கஜேந்திரன், 38, என்பவருக்கும் மஞ்சுவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக கஜேந்திரனிடம், நஞ்சப்பன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். அதுபோல் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு ஓனாம்பள்ளத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கஜேந்திரன், அரிவாளால் நஞ்சப்பனை கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியதில் நஞ்சப்பன் பலியானார்.பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடம் சென்று நஞ்சப்பன் உடலை மீட்டு விசாரித்தனர். இதற்கிடையே கஜேந்திரன் அன்றிரவு, 10:00 மணிக்கு வெட்டிய அரிவாளுடன் பாப்பாரப்பட்டி போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.