உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாப்பாரப்பட்டி அருகேகோவிலுக்கு சீல்

பாப்பாரப்பட்டி அருகேகோவிலுக்கு சீல்

பாப்பாரப்பட்டி அருகேகோவிலுக்கு 'சீல்'பாப்பாரப்பட்டி:பாப்பாரப்பட்டி அடுத்த கோபால்சாமி கோவில் விழா நடத்துவது குறித்து, இருதரப்பினரிடையே ஏற்ப்பட்ட பிரச்னைக்களுக்கு தீர்வு எட்டப்படாததால், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு, 'சீல்' வைத்தனர்.தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பழமையான கோபால்சாமி கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், சிறப்பு வழிபாடு மற்றும் திருக்கல்யாண வைபோகம் நடப்பது வழக்கம். இந்நிலையில் கோவில் விழா நடத்துவது குறித்து இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால், பலமுறை வருவாய் துறையின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இதில் சுமுக தீர்வு எட்டப்படாததால், தொடர்ந்து நிர்வாகத்தில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, அறநிலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவில் உண்டியல், பொருட்கள் வைக்கும் அறை உள்ளிட்டவற்றிற்கு, 'சீல்' வைத்தனர். மேலும், கோவில் ஹிந்து சமய அறநிலைத்துறையின் கீழ், நிர்வகிக்கப்படுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை