| ADDED : ஆக 02, 2024 01:20 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் சித்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட கலசப்பாடி, அரசநத்தம் கருக்கம்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்ல, தார்ச்சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, வாச்சாத்தி முதல் கலசப்பாடி வரை தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பழங்குடியினர் நல திட்டத் தில், கலசப்பாடி கருக்கம்பட்டி, அரசநத்தத்தில், 2.50 கோடி ரூபாய் மதிப்பில், ஈரடுக்கு ஜல்லி சாலை போடும் பணி நடக்கிறது. இதேபோன்று, முனியசாமி கோவில் முதல் கலசப்பாடி வரை, 2 கி.மீ., தொலைவு வரை, முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தில், 80 லட்சம் ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிகளை ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய உதவி பொறியாளர் திலீபன் ஆய்வு செய்தனர்.