| ADDED : ஜூலை 21, 2024 09:33 AM
அரூர் : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் எதிரொ-லியாக, கோட்டப்பட்டி பகுதியில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி தலை-மையில் போலீசார் சாராய வேட்டையில் ஈடு-பட்டனர்.தர்மபுரி மாவட்டம், கோட்டப்பட்டிக்கு நேற்று காலை, 7:00 மணிக்கு, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி வந்தார். அவரது தலை-மையில் தர்மபுரி எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம், அரூர் டி.எஸ்.பி., ஜெகநாதன், மதுவிலக்கு, தனிப்படை இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சிட்லிங், வேலனுார், எஸ்.தாதம்பட்டி, கருமந்-துறை உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். பின், வேல-னுாரில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கள்-ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், பின்விளைவுகள் குறித்து, பொதுமக்க-ளிடம் ஐ.ஜி., பவானீஸ்வரி விளக்கினார். மேலும், தங்கள் பகுதியில் யாரேனும் கள்ளச்சா-ராயம் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்தால் அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் எனக் கூறினார். பின், மதியம், 2:00 மணிக்கு புறப்பட்டுச் சென்றார்.