உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 2ம் சீசனில் பூக்களை காப்பாற்ற மா மரங்களுக்கு மருந்து தெளிப்பு

2ம் சீசனில் பூக்களை காப்பாற்ற மா மரங்களுக்கு மருந்து தெளிப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விளையும் மாம்பழம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஏப்., மே மாத சீசனில், மாவட்டத்தில் நிலவிய அதிகப்படியான வெப்பத்தால், மா மரங்களில் பூக்கள் கருகி, மா சாகுபடி குறைந்தது. உள்ளூர் தேவைக்கும் பற்றாக்குறையான விளைச்சல் இருந்தது. இதனால், மா விவசாயிகள் மற்றும் அதை நம்பியிருந்த தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். கடந்த மாதங்களில் பெய்த மழையால், மா மரங்கள் துளிர்த்து, 2ம் சீசனுக்கான, பூ பூக்க தொடங்கி உள்ளது. இச்சமயத்தில், மரத்தின் இலைகள் மற்றும் பூக்களில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. முதல் சீசனில் மா விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்ட நிலையில், 2வது சீசனுக்கு வரும் மாங்காய்களை காப்பாற்ற விவசாயிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். மா மரங்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியை தொடங்கி உள்ளனர். நடப்பாண்டு, 2ம் சீசனில் மழை கை கொடுத்தால், 100 டன் அளவிற்கு, சாகுபடி கிடைக்கும் என, மா விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை