உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கருவில் சிசு பாலினம் கண்டறிந்தவர் கைது

கருவில் சிசு பாலினம் கண்டறிந்தவர் கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம், சீங்கேரி கூட்ரோடு பகுதி-யிலுள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக, கருவிலுள்ள சிசுவின் பாலினம் கண்டறிவது குறித்து, சுகாதாரம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் சாந்திக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று முன்தினம் மருத்துவ குழுவினர் அங்கு சென்றனர். இதில், தர்மபுரி அடுத்த, இலக்கியம்பட்டியை சேர்ந்த கற்பகம், 39, வெண்ணாம்பட்டியை சேர்ந்த வடிவேல், 40, ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து, தப்பியோடிய திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்த திருமலை, 40, ஜோதி, 37 ஆகியோரை தேடி வந்த நிலையில், நேற்று ஜோதியை மகேந்திர-மங்கலம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ