உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நீர்நிலைகள் அருகில் சிறுவர்களை விளையாட அனுமதிக்க வேண்டாம்; ஆர்.டி.ஓ., எச்சரிக்கை

நீர்நிலைகள் அருகில் சிறுவர்களை விளையாட அனுமதிக்க வேண்டாம்; ஆர்.டி.ஓ., எச்சரிக்கை

அரூர்: 'நீர்நிலைகள் அருகில் சிறுவர், சிறுமிகளை விளையாட அனுமதிக்க வேண்டாம்' என, அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், நேற்று துவங்கி, நாளை வரை பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆகவே நீர்நிலைகளின் அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மேலும் நீர் நிலைகளின் அருகில் சிறுவர், சிறுமிகளை விளையாடுவதற்கு அனுமதிக்க வேண்டாம். சாலையோரங்களில் மரங்களின் கீழ் இருசக்கர வாகனங்களுடனோ அல்லது தனியாகவோ நிற்பதை தவிர்க்க வேண்டும். மின் கம்பங்களின் அருகில் செல்லாமல் இருப்பதுடன், அவைகளை தொடக் கூடாது. மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும். மழை பெய்யும் போது இரு சக்கர வாகனங்களில் வெளியே செல்வதை கூடுமான வரை தவிர்க்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை