உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சின்ன வெங்காயம் பயிரிட விவசாயிகள் ஆர்வம்

சின்ன வெங்காயம் பயிரிட விவசாயிகள் ஆர்வம்

தர்மபுரி : சின்ன வெங்காயம் விலை உயர வாய்ப்புள்ளதால், அதை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, திண்டுக்கல் உட்பட, பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகி-றது. கடந்தாண்டு சின்ன வெங்காயம் ஒரு கிலோ, 160 ரூபாய் வரை விற்றது. கடந்த சில நாட்களாக, தர்மபுரி உழவர் சந்-தையில் ஒரு கிலோ, 55 ரூபாய் வரை விற்பனையானது. தொடர்ந்து, நல்ல விலை கிடைத்து வருவதால், தமிழகத்தின் பல்-வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் வெங்காய சாகுப-டியில் ஈடுபட்டுள்ளனர்.இதில், தர்மபுரி மாவட்டத்தில், ஆடி பட்டத்தில், சின்ன வெங்-காயம் பயிரிட, விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து, அதகபாடியை சேர்ந்த மொத்த விற்பனையாளர் சர-வணன் கூறியதாவது:தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டை விட, இந்தாண்டு வெங்-காயம் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில், விதை வெங்காயம் திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து கொள்-முதல் செய்யப்படுகிறது. இங்கிருந்து சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்த பின், தர்மபுரி மாவட்டம் முழுவதும் மற்றும் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விவசா-யிகள் வாங்கி செல்கின்றனர். தற்போது, மொத்த விற்பனையில் தரத்திற்கேற்ப கிலோ, 40 முதல், 50 ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ