உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புகையிலை பொருட்களை காரில் கடத்திய 2 பேர் கைது

புகையிலை பொருட்களை காரில் கடத்திய 2 பேர் கைது

தொப்பூர், பெங்களுரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கட்டமேடு பகுதியில், நேற்று மதியம், 12:30 மணிக்கு, தொப்பூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தர்மபுரி வழியாக, சேலம் நோக்கி சென்ற டொயோட்டா கிளான்சா காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அரசு தடை செய்த, 80,000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், 12 மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது. காரை ஓட்டி வந்த, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்த செல்வகுமார், 27, மற்றும் அதே பகுதியை சேர்ந்த பரூக், 40 ஆகிய இருவரையும், தொப்பூர் போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ