உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 20 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

20 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

அரூர்:தர்மபுரி மாவட்டம், சின்னாங்குப்பத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி, கோபிநாதம்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் இரவு, 9:00 மணிக்கு அங்கு சென்றனர்.அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 'அசோக் லேலண்ட்' லாரியில், 60 கிலோ எடையில், 329 மூட்டைகளில், 19,740 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. லாரி உரிமையாளர் மற்றும் டிரைவருமான சேலம் மாவட்டம், ஒமலுார் அருகே குதிரைகுத்திப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், 38, சின்னாங்குப்பம் ரகு, 34, அதியமான்கோட்டை மாடன் ரைஸ்மில் உரிமையாளர் செல்வராஜ்,45, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைக்கு ரேஷன் அரிசியை கடத்திச் சென்றது விசாரணையில் தெரிந்தது. மேலும், இதில் தொடர்புடைய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ