உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நல்லம்பள்ளியில் 3,000 ஆண்டுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு

நல்லம்பள்ளியில் 3,000 ஆண்டுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே, 3,000 ஆண்டுக்கு முந்தைய, பெருங்கற்-கால ஈமச்சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே, தொன்மம் வரலாற்று ஆய்வு அறக்கட்டளை சார்பில், இளந்திரையன், கணேஷ், தர்ம-புரி அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் சந்திரசேகர், உதவி பேராசி-ரியர்கள் செல்வராஜ், விஜய் மற்றும் வரலாற்று மாணவர்கள், அஜ்-ஜிப்பட்டியை ஒட்டிய வனப்பகுதியில், பெருங்கற்கால ஈமச்சின்-னங்கள் மற்றும் தடயங்களை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் சந்திர-சேகர் கூறியதாவது: நல்லம்பள்ளி அருகே, 3,000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த பெருங்கற்கால மக்களின் ஈமச்சின்னங்கள் கண்ட-றிப்பட்டது. அக்காலத்தில் யாரேனும் இறந்தால், பெரிய பள்ளம் தோண்டி, 4 பக்கமும், 6 முதல், 8 அடி நீள பெரிய பலகை கற்-களை கொண்டு சவகுழியை தயார் செய்து, அதன் மேல் பெரிய கல்லை கொண்டு மூடுவது வழக்கம். இதன் எடை, 5 முதல், 10 டன் வரை இருக்கும். மேலே மண் கொண்டு மூடி, சுற்றிலும் வட்டமாக, வட்ட வட்ட கற்களை கொண்டு ஒரு ஈமக்குழி அமைப்பர். இது கல்வட்டம் என அழைக்கப்படும். இதுவே, பிற்-காலத்தில் டால்மென்ட் எனப்படும் கல் பதுக்கைகளாக மாறியது. புதையல் கிடைக்கும் என சிலர் இவற்றை சேதப்படுத்தி வரு-வதால், இவற்றை நினைவிடமாக அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை