உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சரக்கு வாகனம் கவிழ்ந்து 4 பெண்கள் காயம்

சரக்கு வாகனம் கவிழ்ந்து 4 பெண்கள் காயம்

கம்பைநல்லுார்: கம்பைநல்லுார் அடுத்த, கெலவள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். வழக்கம் போல் நேற்று காலை, 8:00 மணிக்கு குரங்கேரியிலுள்ள, குளத்தை துார்வார, 23 பெண்கள் உட்பட, 25 பேர் டாடா ஏஸ் வாகனத்தில் சென்றனர். வாகனத்தை கெலவள்ளியை சேர்ந்த பூவரசன், 23, என்பவர் ஓட்டினார். 'அரூர் - கம்பைநல்லுார் சாலையில், பூமி சமுத்திரம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் பயணம் செய்த ராமலிங்கம் நகர் தமிழரசி, 47, பூங்கொடி, 50, கெலவள்ளி புதுார் பாஞ்சாலை, 58, உஷா, 40, ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கம்பைநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ