உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரி ஓட்டு எண்ணும் மையத்தில் 400 சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு

தர்மபுரி ஓட்டு எண்ணும் மையத்தில் 400 சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு

தர்மபுரி: தர்மபுரி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை கண்காணிப்புக்காக, 400 'சிசிடிவி' கேமராக்கள் மற்றும், 650 போலீசார் பயன்படுத்த உள்ளதாக, மாவட்ட தேர்தல் அலுவலரும், தர்மபுரி மாவட்ட கலெக்டருமான சாந்தி தெரிவித்தார். இது குறித்து அவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் படி, தமிழ்நாட்டில் லோக்சபா முதல் கட்ட தேர்தல் ஏப்., 19ல் நடந்தது. தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய, 6 சட்டசபை தொகுதிகளில் பதிவான மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரையில் உள்ள, அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. தபால் ஓட்டுகள் காலை, 8:00 மணிக்கு தொடங்கும். காலை, 8:30 மணிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை தொடங்கும்.ஒரு சட்டசபை தொகுதிக்கு, 14 மேஜைகள் என, 6 சட்டசபை தொகுதிக்கும் மேஜைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு ஓட்டு எண்ணும் மேற்பார்வையாளர், ஒரு ஓட்டு எண்ணும் உதவியாளர் மற்றும் ஒரு நுண்பார்வையாளர் உட்பட ஓட்டு எண்ணிக்கையில், 390 பேரும் பணியாளர்கள் மற்றும் உதவி அலுவலர் என மொத்தம், 500 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பிற்காக, 650 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மொத்தம், 400, 'சிசிடிவி' கேமராக்கள் மூலம், வீடியோ பதிவு செய்யப்படும். வேட்பாளர்களின் முகவர்கள் என, 1,000க்கும் மேற்பட்டோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கையை காலை, 8:00 மணி முதல் முடியும் வரை சுமுகமாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி