உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாணவர்களுக்கு கல்லுாரி கனவு நிகழ்ச்சி

மாணவர்களுக்கு கல்லுாரி கனவு நிகழ்ச்சி

தர்மபுரி;தர்மபுரியில், தனியார் கல்லுாரியில் நடந்த கல்லுாரி கனவு நிகழ்ச்சியை, மாவட்ட கலெக்டர் சாந்தி துவக்கி வைத்து பேசியதாவது:கல்லுாரி கனவு திட்டம், நான் முதல்வன் திட்டத்தில் துவங்கப்பட்டது. இது பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அணைவரும் உயர்கல்வி துவங்க வழிகாட்டுதலை வழங்கும் திட்டம். கடந்தாண்டில் அரசு பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த, 16,488 மாணவர்களில், 60 சதவீதம் பேர் தற்போது உயர்கல்வி படிக்கின்றனர். இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதில், தர்மபுரி மாவட்டத்தில், 93.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு உதவிடும் வகையில், 14417 என்ற எண்ணை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் தொடர்பு கொண்டால், எந்த கல்லுாரி, விண்ணப்பித்தல், கல்விக்கடன், உதவித்தொகை பெறுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை மாணவர்கள் அறியலாம். காலை, 8:00 முதல், இரவு, 8:00 மணி வரை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம், டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்ஸி ராஜ்குமார், கல்லுாரி கல்வி இணை இயக்குனர் சிந்தியா, ஆர்.டி.ஓ., காயத்ரி, சி.இ.ஓ., ஜோதிசந்திரா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ