மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
19 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
19 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
19 hour(s) ago
தர்மபுரி, ஆடி அமாவாசையையொட்டி நேற்று, கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில், ஆடி அமாவாசையையொட்டி நேற்று, மாவட்ட முழுவதுமுள்ள கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இதில், தர்மபுரி அபய ஆஞ்சநேயர், மின்பகிர்மான நிலைய வீர ஆஞ்சநேயர், முத்தம்பட்டி வனப்பகுதியிலுள்ள வீர ஆஞ்சநேயர், தொப்பூர் மன்றோ குளக்கரை ஜெயவீர ஆஞ்சநேயர், இண்டூர் வீர ஆஞ்சநேயர் மற்றும் கோவிலுார் குந்தியம்மன், எச்சனஹள்ளி கரூர் மாரியம்மன், தேவரூத்துபள்ளம் தெய்வகண்ணி தேவூத்து மாரியம்மன் உட்பட மாவட்டம் முழுவதுமுள்ள கோவில்களில் அதிகாலை முதல், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அலங்காரம் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் மற்றும் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago