உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அம்மன் கோவில்களில் ஆடி மாத சிறப்பு பூஜை

அம்மன் கோவில்களில் ஆடி மாத சிறப்பு பூஜை

தர்மபுரி: ஆடி மாத துவக்கத்தையொட்டி, தர்மபுரியிலுள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.ஆடி மாத முதல் நாளையொட்டி, தர்மபுரி மாவட்டம் கேட்-டையிலுள்ள மல்லிகார்ஜீனேஸ்வரர் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதை, ஏராளமான பக்-தர்கள் தரிசனம் செய்தனர். இவர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து, படையலிட்டு தரிசித்தனர். இதேபோல், தர்மபுரி அடுத்த கோட்டை கோவில் மல்லிகார்ஜீனேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அம்மன் கோவில், அதகபாடி பொடாரி அம்மன் கோவில், செட்டிக்கரை முனியப்பன் கோவில், பழைய தர்மபுரி வீரமுனியப்பன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று, சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி