உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஜோதிடம் பார்ப்பதாக கூறி பணம், நகை திருடியவர்கள் கைது

ஜோதிடம் பார்ப்பதாக கூறி பணம், நகை திருடியவர்கள் கைது

மாரண்டஹள்ளி: மாரண்டஹள்ளி அருகே, ஜோதிடம் பார்ப்பதாக கூறி, நகை, பணம் கொள்ளையடித்த, தம்பதியினரை- போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த இராசிக்குட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன், 47; இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம், கிருஷ்ணகிரியை சேர்ந்த அண்ணாமலை, 46; வள்ளி, 38; தம்பதியினர் ஜோதிடம் பார்ப்பதாக கூறி சென்றனர். அப்போது சரவணன் மனைவி புஷ்பாவிடம், நீங்கள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளதால், அதில் இருந்து மீட்க பரிகாரம் செய்வதற்கு இருவரும் கை, கால்களை கழுவி வரும்படி கூறியுள்ளனர். சரவணன், புஷ்பா இருவரும் வீட்டிற்கு பின்புறம் சென்றவுடன், வீட்டின் பீரோவில் இருந்த அரை பவுன் தங்க மோதிரம், 3 கிராம் வெள்ளி மோதிரம், 7,500 ரூபாய் ஆகியவற்றை அண்ணாமலை, வள்ளி ஆகியோர் திருடி ஓட்டம் பிடித்தனர்.சரவணன் வந்து பார்த்தபோது, நகை, பணம் திருட்டுபோனது தெரிய வந்தது. இது குறித்து, மாரண்டஹள்ளி போலீசார் விசாரித்து ராயக்கோட்டை சாலையில், டி.வி.எஸ்.மொபட்டில் சென்று கொண்டிருந்த, அண்ணாமலை, வள்ளி ஆகிய இருவரையும் கைது செய்து, நகை, பணத்தை மீட்டு சரவணனிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ