மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
9 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
9 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
9 hour(s) ago
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அரூர் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பிளஸ்- 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி, 12 ஆண்டுகளாக, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. பிளஸ் -2 மாணவர் கோகுல், 600க்கு, 586 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.மேலும், 550- மதிப்பெண்களுக்கு மேல், 8 பேர், 500-க்கு மேல்,- 31 பேரும் பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் சர்வேஷ், மாணவி பிரித்தீஸ்வரி ஆகியோர், 500க்கு, 497 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் சிறப்பிடமும், பள்ளியில் முதலிடமும் பெற்றுள்ளனர். மாணவர்கள் தீபிகா, நிரோஷினி, மதுபாலன் ஆகியோர், 494 மதிப்பெண்கள் பெற்று, 2ம் இடமும், மாணவியர் இந்திரா, கவுசல்யா ஆகியோர், 493 மதிப்பெண்கள் பெற்று, 3ம் இடம் பிடித்துள்ளனர். மேலும், 450-க்கு மேல், 35 பேரும், 400-க்கு மேல், 3 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.சாதனை மாணவ, மாணவியர், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர் சுரேஷ், மற்றும் ஆசிரியர்களை, குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அறக்கட்டளை தலைவர் முருகன், தாளாளர் மனோகரன் செயலாளர் மனோகரன், பொருளாளர் சுரேஷ் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago