உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கோயில் உண்டியலில் ரூ.90 கோடிக்கு செக்

கோயில் உண்டியலில் ரூ.90 கோடிக்கு செக்

பென்னாகரம்:பென்னாகரத்தில் ஒரு கோவில் உண்டியலில், 90 கோடி ரூபாய்க்கான காசோலை செலுத்தப்பட்டிருந்தது.தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த பி.அக்ரஹாரத்தில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. காணிக்கை குறித்து அறிய, கோவில் உண்டியலை திறந்து எண்ணும் பணி நேற்று நடந்தது.இதில், 90 கோடியே 42 லட்சத்து 85,256 ரூபாய்க்கான ஒரு காசோலை கிடைத்தது. இதை யார் போட்டது என தெரியவில்லை. தொகை உண்மையா அல்லது போலி காசோலையா என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை