| ADDED : மார் 30, 2024 03:27 AM
பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 30---தர்மபுரி லோக்சபா தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில், 314 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நத்தமேடு, அய்யம்பட்டி, ஜாலியூர், கவுண்டம்பட்டி உள்ளிட்ட, 72 ஓட்டு சாவடிகள் பதற்றமானவையாக உள்ளது. இந்த ஓட்டு சாவடி பகுதிகளில் தேர்தல் பொது பார்வையாளர் அருணாராஜோரியா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்பகுதியில் அமைதியான முறையில் ஓட்டு பதிவு நடக்கவும், அச்சமின்றி அனைவரும் ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.பின், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் கட்டுபாட்டு கண்காணிப்பு அறைகளை பார்வையிட்டு, தேர்தல் சம்பந்தமாக வரும் புகார்கள் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ஓட்டு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளை ஆய்வு செய்தார்.உதவி தேர்தல் அலுவலர் செர்லி ஏஞ்சலா, தாசில்தார் சரவணன், தனி தாசில்தார்கள் பெருமாள், மில்லர், தேர்தல் துணை தாசில்தார் சிவஞானம், ஆர்.ஐ., கார்த்திக் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.