| ADDED : ஜூன் 18, 2024 11:43 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தெளிப்பு நீர் பாசனத்தில், பெரும்பாலான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டத்தில், காய்கறி, பழங்கள், கீரை வகைகள் பூக்கள் என, பல்வேறு வகையான பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் மழையால் சில பூக்களின் சாகுபடி குறைந்து, வரத்தும் குறைந்துள்ளதால், இவற்றின் விலை உயர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், சில விவசாயிகள் வேருக்கு தண்ணீர் விடாமல் பூக்கள் மற்றும் அவற்றின் செடிகளுக்கு மேல் மட்டுமே, தெளிப்புநீர் பாசனம் செய்து வருகின்றனர். இதனால், செடியின் வேர் மற்றும் தண்டுகள் அழுகாமல் பாதுகாக்கப்படுகிறது. அதன்படி, சாம்பங்கி பூக்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது பயிர்கள் அழுகாமல் இருக்க, தெளிப்புநீர் பாசனத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பூக்கள் அழுகாமல் காலையில் பறிக்கும் போது மலர்ந்த பூக்களாக அழுகாமல் இருக்கும். இதனால், இப்பூக்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அதிகளவில் தெளிப்பு நீர் பாசனத்தை செய்து வருகின்றனர்.