உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விவசாய நிலத்தில் தீ விபத்து

விவசாய நிலத்தில் தீ விபத்து

போச்சம்பள்ளி,: போச்சம்பள்ளி ஜி.ஹெச்., அருகே மணி, 48, என்பவரின் விவசாய நிலம் உள்ளது. இதில் விளைந்திருந்த ஜம்பு என்ற கோரைப்புல் கடந்த, 2 மாதங்களாக கடும் வெயிலினால் காய்ந்திருந்தது.நேற்று காலை மர்ம நபர்கள் வைத்த தீயால், ஜம்பு தீப்பிடித்து மளமளவென தீ பரவியது. 20 அடி உயரத்திற்கு தீ எரிந்ததால் அந்த இடத்தில் இருந்த, 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. அருகே, ஜி.ஹெச்., சார் பதிவாளர் அலுவலகம், அரசு பள்ளி, குடியிப்பு பகுதி உள்ளதால், அதிகளவு மக்கள் சென்று வரும் நிலையில், இந்த தீ விபத்து மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினர், ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ