உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கருவில் சிசுவின் பாலினம் கண்டறிந்த கும்பல் கைது

கருவில் சிசுவின் பாலினம் கண்டறிந்த கும்பல் கைது

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், எர்ரபையனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட நெக்குந்தி அடுத்த முத்தப்பா நகரைச் சேர்ந்த லலிதா, 42, என்ற இடைத்தரகர் வாயிலாக, கருவுற்ற பெண்கள் கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் கண்டறிவதாக, தர்மபுரி மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தர்மபுரி மாவட்ட சுகாதாரப் பணிகள் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குனர் சாந்தி தலைமையிலான மருத்துவக்குழுவினர் மற்றும் போலீசார், நெக்குந்தி அடுத்த முத்தப்பா நகருக்கு சென்றனர்.அங்கு வீட்டில் இருந்த அனைவரையும் பிடித்தனர். கருவுற்றிருந்த நான்கு பெண்களிடம் தலா, 13,000 ரூபாய் பெற்றுக்கொண்டு, ஸ்கேன் மிஷினில் பரிசோதனை செய்து, கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்தது தெரியவந்தது. முக்கிய நபரான கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகேசன், 48, பெண்களுக்கு சிசுவின் பாலினம் குறித்து கண்டறிந்து தெரிவித்துள்ளார். முருகேசன் ஏற்கனவே மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் சட்டவிரோத கருக்கலைப்பு செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர். இதில் தொடர்புடைய நடராஜன், 40, சின்ராஜ், 28, மற்றும் பெண் இடைத்தரகர் லலிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை